கண்டி – திகன நில அதிர்வுகள் குறித்த ஆய்வுக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பு!

Monday, December 14th, 2020

இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் கண்டி – திகன பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவான சில நில அதிர்வுகள் தொடர்பிலான ஆய்வுகுழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு அதனுடன் தொடர்புடைய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் புவி சரிதவியல் மற்றும் மற்றும் சுரங்க பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து 5 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் கண்டி – திகன பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குறுகிய காலத்திற்குள் அந்த பகுதியில் மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

பூமியின் உட்புறத்தில் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த நில அதிர்வு காரணமாக விக்டோரிய நீர்த்தேக்கத்திற்கு சேதம் ஏற்படுமா இல்லையா என்பது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக புவி சரிதவியல் மற்றும் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: