அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி!

Friday, March 17th, 2023

நாட்டில் அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கியது

இந்த நன்கொடை ஊடாக சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் நன்மையடைய உள்ளனர்

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதனூடாக 06 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குள், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை ஜப்பான் அரசாங்கம் யுனிசெப் ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தலைமன்னாரில் ரஸ்யா நாட்டு பிஜை கைது – “கொரோனா” தொற்று சந்தேகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்பட...
ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது - போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீத...
முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெ...