கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை சர்வதேச தரத்திற்கு அமைய மறுசீரமைக்கப்படும் -அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா
Friday, December 23rd, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை சர்வதேச தரத்திற்கு அமைய மறுசீரமைக்கப்படவுள்ளதாக போக்குவத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக செலவிடப்படும் தொகை 720 கோடி ரூபாவாகும். மறுசீரமைப்பு பணிகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணிகளை ஏப்ரல் மாதம் 5ம் திகதி பூர்த்தி செய்வது இலக்காகும். இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts:
பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் ...
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தேடி சுற்றிவளைப்பு - நுகர்வோர் விவகார அதிகார ...
வீட்டிலிருந்தவாறே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி - 7ஆம் திகதிமுதல் அறிமுகப...
|
|
|


