பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் செயற்பாடு கடந்த 2020 மார்ச் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் இலங்கைக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

முன்னர் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றை தயாரித்தவரான சசிரங்க டி சில்வா என்பவரே இந்தத மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.

இந்த மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் மொத்தமாக 120 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் என்றும் அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிளின் பொடி, செசி மற்றும் மின்சார பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மோட்டார்சைக்கிள் எதிர்வரும் ஓகஸ்ட், 2022க்குள் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: