கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!

Friday, December 30th, 2022

எமது சொந்த முயற்சியில் அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பெறப்பட்ட அனுமதிகளுடன் நாம் முன்னெடுத்துவரும் கடலட்டை பண்ணை தொழிலை சிலர் தமது சுயசல தேவைகளுக்காகவே தடுக்க முற்படுகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள கடலட்டை பண்ணையாளர்கள் யுத்தத்தினால் முடக்கப்பட்டுப்போன தமது வாழ்வாதாரம் மட்டுமல்லாது நாட்டின் அன்னியச் செலாவணியும் மீண்டும் மேம்படுத்த இந்த கடல் வேளாண்மை அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றையதினம் (30) கடலட்டை பண்ணையாளர்கள் தமக்கு எதிராக ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்படும் போராட்டங்கள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது யாழ் மாவட்டத்தின் பல கடற்றொழில் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் என நூற்’றுக்கணக்கானோர் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு பிரதான வீதி வழியூடாக யாழ் நகரை அடைந்தது.

யாழ் பேருந்து நிலையத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள் பஸ் நிலையம் முன்பாக 30 நிமிடங்களுக்கு மேல் வீீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்திரந்தனர்.

அதன்பின்னர் வேம்படி சந்தியூடாக ஆரியகுளம் சந்தியை சென்றடைந்த போராட்டகாரர்கள் ஸ்’ரான்லி வீதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகததை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்பின்னர் போராட்டகாரர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது போராட்டம் தொடர்பிலும் தமக்கான தேவைப்பாடுகள் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

குறித்த மகஜரை அமைச்சரின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவரும் கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகருமான சி. தவராசா மற்றும் சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் க.கமலேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவெளை

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலையில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை தங்களுக்கு வேண்டுமென வலியுறுத்தியே கடற்றொழிலாளர்களால் இந்த போராட்டம் துன்னெடுக்கப்பட்டதுடன் பேரணியில் கலந்து கொண்டோர் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாகவும் தமது கடும் கண்டனத்தினையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: