அனர்த்தம் காரணமாக 146 பாடசாலைகள் பாதிப்பு!

Friday, June 2nd, 2017

இயற்கை அனர்த்தம் காரணமாக, 146 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதுசப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களின் பாடசாலைகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.சபரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 65 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் 64 பாடசாலைகளும், தென்மாகாணத்தில் 17 பாடசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அதேநேரம் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்குகளால் 45 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக மாணவர்கள் சப்ரகமுவ மாகாணத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அங்கு 18 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அனர்த்த நிலைமைகள் காரணமாக 77 பாடசாலைகள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 8 மாவட்டங்களின் பாடசாலைகள் இன்று வரையில் மூடப்பட்டுள்ளன.இந்த மாகாணங்களில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் தினம் குறித்து இன்றையதினம் தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

Related posts: