கடலுக்கு செல்லவேண்டாம்! எச்சரிக்கை!! – வளிமண்டலவியல் திணைக்களம்!!!

Sunday, December 11th, 2016

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் ஏற்பட்ட வர்தா என்ற சூறாவளி  எதிர்வரும் தினங்களில் வடமேல் திசையில் இந்தியாவை நோக்கி நகரும். நாளை மாலை இந்தியாவின் சென்னை பிரதேசத்தின் கரையோரப் பகுதிக்குள் பிரவேசிக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பின் அழுத்தம் காரணமாக இப்பகுதியிலிருந்து 200 மற்றும் 300 கிலோ மீற்றர் தூரத்திலான கரையோரப் பிரதேசத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடனும் காணப்படும். கடும் மழையையும் எதிர்பார்க்க முடியும். இந்த கடல் பிரதேசம் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றதுடன் மிகவும் அனர்த்தத்தை கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்று வளிமண்டளவயல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியிலான கடல் பகுதியிலான ஆழமான கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் தற்போது காணப்படும் முகிற்கூட்டங்கள் காரணமாக இந்தப் பிரதேசத்தில் தற்காலிகமாக 70 கிலோ மீற்றருக்கும் 80 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட வகையில் காற்று வீசும். இதனால் இன்றும் நாளையும் மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் சம்பந்தப்பட்ட பிரிவினரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

cc10e942377827f1c0a81f3f78c91e37_XL

Related posts: