மார்பகப் புற்றுநோயால் அதிகமான பெண்கள் பாதிப்பு!

Tuesday, February 5th, 2019

இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பபில்லோமா (எச்.பி.வி) எனும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கையானது 11 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் எச்.பி.வி. எனும் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: