மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2023

அண்மையில் பொன்னகர் கிராமத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் சென்றபோது கிராம மக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் பிரத்தியேக நிதியில் கொள்முதல் செய்யப்பட்ட தகர பந்தல் மற்றும் கதிரைகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் பொன்னகர் பகுதியில் நடைபெற்றது.

கிராம சேவையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் வைத்திலிங்கம் தவனாதன் கலந்துக்கொண்டு பந்தல் மற்றும் கதிரை மக்களிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணப்படுகின்றமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வுகளை கண்டு பொருளாதார ரீதியாக அபிவிருத்தியை நோக்கி பயணிக்க கூடிய  வாய்ப்பினை தந்துள்ளது.

அத்தோடு அமைச்சரவை அந்தஸ்து உள்ள தமிழ் அமைச்சரும் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட கூடியவர் என்றபடியால் மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகள், தேவைகளை இனங்கண்டு அமைச்சரவை கூட்டத்தினூடாக தீர்வினை பெறமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சி கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்திலிங்கம் தவநாதன் தெரிவித்தார்

கிளிநொச்சி சிவபாத கலையகத்தை உயர்தர பாடசாலையாக மாற்றுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, குறித்த கோரிக்கை கடிதம் கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காணி பிரச்சனை, காணி கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்தி வருகின்றார்.  அது தொடர்பான தீர்வுடன் அமைச்சர் விரைவில் கிராமத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என்று மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.

இதன்போது வட்டார அமைப்பாளர் சுபாஸ், உதவி அமைப்பாளர் சீலன், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: