கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை வரவேற்றுள்ளது அமெரிக்கா!
Thursday, June 27th, 2024
கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், தமது எக்ஸ் தளத்தில் இதனை வரவேற்றிருப்பதுடன், இந்த ஒப்பந்தமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்குப் பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை தொடர்ந்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நீண்டகால வளர்ச்சி நோக்கில் வெளிப்படைத் தன்மை மற்றும் நிலையான மாற்றங்களை உள்ளீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச ஊடகங்களைக் கண்காணிக்க விசேட குழு - ஊடக அமைச்சர்!
60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு ப...
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் - மத்திய வங்கி...
|
|
|


