தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்  சுட்டிக்காட்டு!

Wednesday, October 10th, 2018

தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும், இதற்கமைவான திட்டங்கள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதனூடாகவே எமது வழங்கலை சரியானமுறையில் முகாமை செய்ய முடியும் என வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தவாரம் வடக்கிற்கு வந்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது கிளிநொச்சியிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களும் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே மாகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்கள் குறித்த விடையங்களை சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு ஏற்றவாறான திட்டங்களை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். விவசாய நிலங்களும், முயற்சியாளர்களும் சில பிரதேசங்களில் இருக்கின்ற போதும் வழங்கள் குறித்த பிரதேசங்களை நோக்கி திரும்பாமல் இருப்பது விவசாயத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக பாரதிபுரம் மலையாளபுரம் பிரதேசத்துக்கான ஏற்று நீர்ப்பாசனத் திட்டமொன்றை ஏற்படுத்துமாறு அந்த பிரதேச மக்கள் நீண்டகாலமாக முன்மொழிகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகளை மேம்படுத்த முடியும்.

இவ்வாறான கோரிக்கைகளுக்கு விவசாய அமைச்சு எதிர்காலத்தில் முன்னுரிமை வழங்கும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்குதெளிவுபடுத்தினார்

unnamed (1)

unnamed

Related posts: