கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிடம் கோரிக்கை!

Tuesday, May 12th, 2020

இலங்கை மத்திய வங்கியினால் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிடம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை கருத்திற் கொண்டு ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் சலுகை காலம் வழங்குமாறு மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

சுய தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வாகன குத்தகை தொகைக்கு நிறைவேற்று தரமற்ற ஏனைய பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களின் கடன் மற்றும் கடன் அட்டை கொடுப்பனவுகள் மீளச் செலுத்துகைக்கு தவணை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா, ஆடைக்கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மைகளில் ஈடுபடும் நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பட்டியல் பெயர் இடம் பெற்றிருப்பதனைக் கருத்திற் கொண்டு கடன் பெறுனர்களுக்கான சலுகைகளை வங்கிகள் நிராகரிக்கக் கூடாது எனவும் மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: