கடந்த 24 மணி நெரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது – சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தல் சுகாதார விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டதுடன், சிலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மேல் மாகாணத்தில் நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தப்பட்ட 700 வாகனங்களில் 39 வாகனங்கள் எவ்வித அத்தியாவசிய காரணங்களுமின்றி பயணித்தவை என அடையாளம் காணப்பட்டன.இதனையடுத்து அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அநாவசியமாக பயணித்த 27 முச்சக்கர வண்டிகளும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

அதேநேரம் மேல் மாகாணத்திலிருந்து 68 பேர் பிற மாகாணங்களுக்கு செல்ல முயற்சித்தபோது திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பெலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: