பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை நீடிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் – சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, June 15th, 2021

இலங்கையில் இந்த வாரத்தில் பெற்றுக்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே, பயணத் தடை நீடிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்டப்படுமென சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் 21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பயணத் தடையை, கடந்த 7ஆம் திகதி தளர்த்த திட்டமிடப்பட்ட போதிலும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாமையினால், எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், நாளாந்தம் சுமார் 2 ஆயிரத்து 300 ற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். அத்தோடு நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

அதேநேரம் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்த போதிலும், கொவிட் உயிரிழப்புக்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், பயணத் தடை எப்போது தளர்த்தப்படுமென்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: