நாளை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம் !

Monday, December 5th, 2016

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகின்றது. சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். ஐயாயிரத்து 400 பரீட்சை நிலையங்கள் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்

சுமார் 40 ஆயிரம் கல்விசார் உத்தியோகத்தர்கள் இந்தப் பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் தெரிவிக்கையில்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முறைப்பாடுகளை  அவசர தொலைபேசி இலக்கமான 1911ற்கு அல்லது பாடசாலை பரீட்சை கிளைக்குரிய 0112-78-42-08 அல்லது 0112-78-45-37 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதேவேளை  கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவசரமாக அடையாள அட்டைகளை வழங்கும் வகையில் இன்று விசேட கரும பீடமொன்று திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக மாணவர்கள் தனிப்பட்ட வகையில் வரவேண்டிய அவசியம் இல்லையென பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பில் இங்கு வந்து அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து அடையாள அட்டையைப் பெற்றுச் செல்ல முடியும் என திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார ரத்நாயக்க தெரிவித்தார்.

923ea0152fbc34595d687edd9d099b4b_XL

Related posts:

மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வா...
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அக்கறையில்லை - மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்ட...
உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...