சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபொதும் இடமளிக்கப் மாட்டேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023

தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலப்பகுதியில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் விமானப்படை முகாமில் படையினர் மற்றும் காவல்துறையினரை சந்தித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பல துறைகள் மற்றும் நிறுவனங்களை தற்போது மறுசீரமைக்க வேண்டும்.

இராணுவம் மற்றும் காவல்துறையும் அதில் உள்ளடங்குகின்றன. சிலர் பாதுகாப்பு செலவினத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். முடியுமானளவு இந்த வருடத்தில் அதைக் குறைத்திருக்கின்றோம்.

எதிர்வரும் 2027 ஆம் மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இராணுவத்தினர் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவடையும்.

ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பாலும் குறித்த வருடங்களில் பாதுகாப்பு செலவினம் பாரியளவில் குறைவடையும்.

ஏனைய அரச துறைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்படாது. காவல்துறையின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதியையும், நாட்டில் அமைதியையும் நிலைநாட்டும் வகையில் காவல்துறையின் எண்ணிக்கை மாத்திரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: