சிறுநீரக நோய் ஒழிப்புக்கான மூன்றாண்டு வேலைத்திட்டம்!

Saturday, January 7th, 2017

நீண்டகால சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மூன்றாண்டு இத்திட்டத்தின் கீழ் நோய் காரணியை கண்டறிவது இலக்காகும் என்று சிறுநீரக நோய் கட்டுப்பாடு தொடர்பாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இதற்கான பரிசோதனைகளும் இடம்பெறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய சிறுநீரக நோய் நிலவும் பிரதேசங்களில் 170 நீர் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயளணி ஏற்படு செய்திருந்த ஊடவியலாளர் மாநாட்டில் அவர் இநத விடயங்களை குறிபிட்டார்.

இந்நோயளர்கள் வவுனிய செட்டிக்குளம், பொலன்னறுவை, மதவாச்சி, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளர்  அசேல தெரிவித்தார்.

சிறுநீரக நோயை இரண்டு வகையாக பிரிக்க முடியும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம கூறினார்.  சிறுநீரக நோய் உயர் குருதி அழுத்தம் என்பனவற்றினால் சிறுநீரக நோயும் நீண்டகால சிறுநீரக நோயும் ஏற்படுகின்றன. சிறுநீரக நோய்கள் நிலவும் பிரதேசங்களை இனம் காண்பதற்கான வைத்தியர்கள் மருந்து வகைகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. சிறுநீரகங்களை பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. நோய்களை கண்டறிவதற்கான வேலைத் திட்டம் விரிவாக முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் கூறினார்.

5a31878bdbc6ed6198031cd27e89337b_XL

Related posts: