கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!

Saturday, March 11th, 2017

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (11) மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர், அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டதோடு, ஆரம்பமானது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணியளவில் யாழ். குருவானார் ஜெயரஞ்சனால், திருச்செபமாலை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, திருச்சிலுவைப் பாதை சிந்தனைகள் இடம்பெற்றது. நாளை காலை 6.00 மணிக்கு, திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 மணிக்கு, ஆயர், குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டு, 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து புனிதருடைய திருச்சொரூப ஆசிர்வாதத்தைத் தொடர்ந்து நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் இலங்கையிலிருந்து  சுமார் 4 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்து கொண்டதோடு, இந்தியாவிலிருந்து எவரும் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்திய மீனவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமை காரணமாக இவ்வருட திருவிழாவை இந்தியர்கள் புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Kachchativu-Feast-11.03.2017-3

Related posts: