ஒழுக்கம் – அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை – அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன்மாவாகும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, December 20th, 2021

“ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது” என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது.

நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. அவர்கள் சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும். இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

பின்னடைவுகள் என்பன ஒரு பயணத்தின் ஒரு பகுதியே ஆகும். அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: