இது மக்களின் தவறல்ல : அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!

Thursday, July 9th, 2020

இலங்கையில் கொரோனா முடக்கலின்போது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகரித்த மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளத்தக்க நிவாரணத்தை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

இந்த இரண்டு மாதங்களிலும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டிருந்தமையால் அவர்களின் பயன்பாட்டுக்கு அமைய மின்சார கட்டணங்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் இது பொதுமக்களின் தவறு அல்ல. அரசாங்கமே பொதுமக்களை வீடுகளில் முடங்கியிருக்குமாறு அறிவித்திருந்தது.

எனவே அந்த இரண்டு மாதங்களிலும் கருத்திற்கொள்ளத்தக்க நிவாரணம் அவசியம் என்பது பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் செயலாளர் பீபீ ஜெயசுந்தரவின் தலைமையிலான குழு ஒன்று எதிர்வரும் புதன்கிழமையன்று எந்தளவு கட்டணத்தொகையை மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கட்டணங்களில் இருந்து குறைக்கலாம் என்பதை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

Related posts: