ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு – முற்றாக அழியும் நிலைக்கு வந்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, May 6th, 2024

அநுராதபுரம் – பலாகல பகுதியில் ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பூச்சி இனம் மிக வேகமாக பரவி வருவதுடன் தென்னை செய்கையை அது முற்றாக அழித்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த பூச்சி இனம் வாழை, மா, அன்னாசி, எலுமிச்சை மரங்கள் மற்றும் பூந்தோட்டங்களிலும் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உரிய தீர்வை விவசாய அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: