பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற தடை!

Sunday, April 11th, 2021

இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சவுதி அரேபியா, கட்டார், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் இலங்கையில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது என்பது தெரியவந்ததை அடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிதி தொடர்பாகவும் அது சம்பந்தமான எவ்வித அறிக்கைகளையும் அரசாங்கத்தில் சமர்பிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

11 தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் 32 இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: