ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!

Thursday, October 12th, 2023

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திரு. அஹமட் பின் அலி சயேக்கை 11.10.2023 அன்று டெம்பிள் ஹவுஸில் சந்தித்தபோது பிரதமர் இந்த யோசனையை முன்வைத்தார்

குறித்த வ இதயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர், பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை முடிப்பதற்கும், வர்த்தகம், எரிசக்தி, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கும், பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க ஒப்புக்கொண்டார்.

ஏற்றுமதிக்கான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்காக புதிய பொருளாதார வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயம் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தற்போது கிடைத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் சொத்தாக திகழ்வதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இரு நாடுகளின்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுக்குழுவில் தூதர் காலித் நாசர் அல்-அமெரி, வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் சுல்தான் அல் மன்சூரி மற்றும் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்கள் துறையின் துணை இயக்குநர் கடா அல் நபுல்சி ஆகியோரும் அடங்குவர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: