நல்லிணக்கத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் – நீதியமைச்சர்!

Tuesday, June 27th, 2017

நல்லிணக்கத்தை சீர்குலைக்க சிலதரப்பினர் முயற்சித்து வருவதாக தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும்  தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

“இந்த நாட்டின் மத சுதந்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாமல் செய்துவிட்டதென கூறிகடந்த வாரம் விக்ரமபாகு கருணாரத்ன தலைமையில் எட்டு பேர் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு பதாதைகளை காட்டி அவற்றை உலகம் முழுவதும் அனுப்பும் போதுதான் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணம் கிடைக்கின்றது. இதற்கு பதிலாக இவர்கள் பிச்சையெடுக்கலாம்.

இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் தயவில் வாழ்பவர்கள்இ கடந்த நாட்களில் என் மீதும் அமைச்சர் சம்பிக்க மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஞானசார தேரரை நாம் ஒளித்துவைத்திருந்ததாக கூறினர். அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமாயின் இந்த நாட்டில் 10 500 பௌத்த விஹாரைகள் உள்ளன. அவர் எமது வீடுகளில் இருந்துவிட்டு நீதிமன்றில் சரணடையவில்லை. இவ்வாறு எமது நாட்டில் தோல்வியடைந்த சிலர் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்றார்.

Related posts:


மஹிந்த வெல்ல வேண்டும் என விரும்பியவர் பிரபாகரன்: கோட்டபய வெல்ல வேண்டும் என விரும்பியவர் அமைச்சர் டக்...
சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசிய...