ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகை  – பிரதமர்!

Monday, November 6th, 2017

வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுமதி அபிவிருத்திகளை முன்னெடுக்கும் கம்பனிகளுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கும் ஊகுகுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்pகரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாய மத்திய கல்லூரி மைதாளத்தில் 4 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. காணி உரிமையற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற  இந்த வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.அதன் போது விகாரைக்கான காணி உறுதிகளையும் பிரதமர் வழங்கினார்.

ஏற்றுமதி அபிவிருத்தி ஊடாக நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர்  நாட்டின் கடன் சுமையை அடுத்த சந்ததியினரும் சுமப்பதற்கு இடமளிக்க போவதில்லையென்றும் கூறினார்.

Related posts: