உடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
Monday, July 4th, 2016
உடுப்பிட்டி இலந்தைக் காட்டுப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறொன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகள், 7 மோட்டர் குண்டுகள் என்பன நேற்று ஞாயிற்றுக் கிழமை(03) பிற்பகல்- 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித் துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டக் கிணற்றை கிணற்றின் உரிமையாளர் நேற்றுத் துப்பரவு செய்த போது குறித்த வெடிபொருட்களைக் கண்டுபிடித்து வல்வெட்டித் துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வெடிபொருட்களைப் பாதுகாப்பாக மீட்டனர். நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று திங்கட்கிழமை(04) இந்த வெடிபொருட்கள் அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்!
விசேட விடுமுறையான இன்று வழமைபோன்று வங்கி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகள் ...
ஈஸ்டர் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் ஆ...
|
|
|


