வடக்கில் சுகாதார பரிசோதகர்களினால் உணவகங்கள் பரிசோதனை!

Friday, February 10th, 2017

ஏ – 09, வீதியில் உள்ள மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் திருமுறி கண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவு வண்டி ஆகிய வற்றின் மீது ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நடமாடும் உணவு விற்பனை வண்டி உட்பட 07, உணவகங்கள் சுகாதார விதி முறைகளை மீறி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மாங்குளத்தில் நடமாடும் உணவு விற்பனை வண்டி உட்பட 03, உணவகங்களும், திருமுறிகண்டி பிள்ளைகள் ஆலய சுற்றாடல் பகுதியில் அமைந்துள்ள 04, உணவகங்களுமாக மொத்தம் 07, உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் வி, விஜய ஐங்கரனினால் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் துணுக்காய் ஆரம்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவக உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து 07, உரிமையாளர்களுக்கும் மொத்தம் 86 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும்14, நாட்களுக்குள் உணவகங்களை புனரமைப்புப் செய்து பொது சுகாதார பரிசோதகர்களின் ஒப்புதலுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற்றதன் பின்னரே உணவகங்களை மீளத் திறக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு,14, நாட்களுக்குள் அனுமதி பெறத் தவறும் பட்சத்தில் உணவகங்களின் வியாபார அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

unnamed-20-15

Related posts: