இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி !

Sunday, September 22nd, 2019


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் நேற்று வெளியிட்டப்பட்ட நாணய மாற்று வீதங்களின் ஊடாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.63 ரூபாவாகவும், கொள்வனவு விலை 178.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 230 ரூபா 30 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 203 ரூபா 26 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 185 ரூபா 51 சதம். கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 6 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 30 சதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: