யாழ்.போதனாவில் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

Monday, January 30th, 2023

யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சத்திர சிகிச்சை கூடத்தில்  நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய  பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு  வரலாற்று சாதனை ஆகும்.

எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள்  முன்னெடுக்கப்பட்டு  சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும்.“ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் - புதிய பிரதமர் தினேஸ் குணவ...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி...