மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது – விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, July 5th, 2022

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இதற்கு முன் 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இலட்சமாக குறைக்க நிதி நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை நேற்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும் போது, பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் வயதெல்லை பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரச சேவையில் ஆசிரியர்களாக நியமித்துக் கொள்வதற்கு அவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

மேற்படி பட்டதாரிகளில் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் அதிகமானவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்கினால் தொழிற்சங்கங்கள் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில் யாப்பின் பிரகாரம் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக் கொள்வதாக இருந்தால் 35 வயதை தாண்டக்கூடாது. இந்த நிலையில் அது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம்.

அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் இணக்கப்பாடு கிடைக்குமானால் மேற்படி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறு நியமிக்கப்படும் போது அவர்களுக்கான கொடுப்பனவும் மேலும் 6700 ரூபாவால் அதிகரிக்கும். அவர்கள் தற்போது காரியாலய உத்தியோகத்தர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தொழிற்சங்கங்களின் முடிவே தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கககது.

000

Related posts: