உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 15th, 2021

உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் ஒன்றை அமைத்து உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து கொம்போஸ்ட் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாளாந்தம் நூறுக்குமதிகமான தொன் கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால் 4 ஆயிரம் தொன் கழிவுகள் மாத்திரமே ஒன்று சேர்க்கப்படுகின்றன. கொம்போஸ்ட் பசளை உற்பத்தி நிலையங்கள் மூலம் 50 தொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இரசாயன பசளை பயன்பாடு காரணமாக விவசாயிகளில் பலர் சிறுநீரக நோய்க்கு உள்ளாகி இருக்கும் மற்றுமொரு மாவட்டமாக வவுனியாவை குறிப்பிடமுடியும். இதனால் தமக்கு சேதன பாசளையை நியாயமான விலைக்கு வழங்கி இந்த உயிர்களை பாதுகாக்க உதவுமாறு விவசாயிகள் அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 102 கிராம சேவகர் பிரிவுகளில் 550 கிராமங்கள் அமைந்துள்ளன. பிரதானமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு அலகல்ல கிராம சேவகர் பிரிவில் அலுத்கம கிராமத்தில் பதினாறு சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: