பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானம்!.

Saturday, December 16th, 2023

பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருமான அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் பயன்படுத்துவதற்கும் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வருடாந்தம் 55 இலட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும், வாகன வருமான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கத் தேவையான புகை பரிசோதனை பத்திரங்களைப் பெறுவதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: