விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்!

Monday, April 10th, 2017

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளன.

பட்டாசு பாவனை பண்டிகை விழாக்களின் போது ஏற்படக் கூடிய விபத்துக்கள், வாகன விபத்துக்களைத் தவிர்த்தல் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

சிறு பிள்ளைகள் பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு பட்டாசு கொழுத்த இடமளிக்காமல் இருப்பது நல்லது என டொக்டர் சமித்தி சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் குடிபோதையுடன் வாகனம் செலுத்துவோரை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவின் பணிப்பாளர் திருமதி டொக்டர் சமித்தி சமரக்கோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:

ஒவ்வொரு புத்தாண்டுக் காலப் பகுதியிலும் இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றபோதிலும் இன்னமும் முன்னேற்றகரமான பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

எவ்வாறாயினும், பண்டிகைக் காலத்தில் சிகிச்சை அளிப்பதற்காக அவசர விபத்துப் பிரிவு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related posts: