மீண்டும் காசநோய் அபாயம்! மக்களே எச்சரிக்கை!!
Tuesday, September 13th, 2016
கொழும்பில் மீண்டும் காசநோய் பரவுவது தலைதூக்கியுள்ளதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வட கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களில் குறித்த பிரதேசங்களில் 20 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
நீர் கட்டணம் உயர்கின்றது? - நீர்வழங்கல் அமைச்சர்!
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
|
|
|


