கொரோனா தொற்று : இலங்கையில் 150 ஐ எட்டியது!

Thursday, April 2nd, 2020

இலங்கையில் இன்று மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவரின் சடலம் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதிஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பணத்தில் நேற்று கொரோனா தொர்ருக்குள்ளனவர்களுக்கு நோய்க்கான எவ்வித அறிகுறிகளும் இருந்திருக்கவில்லை. அவ்வாறான நிலையிலேயே அவர்கள் இனம் கானப்பட்டுள்ளனர்.எனவே யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் வீட்டில் இருங்கள். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் என அவர. மேலும் தெரிவித்துள்ளார்.

எத்தனோல் திரவத்தினை …

அரசாங்கத்தின் வசமுள்ள அனைத்து எத்தனோல் திரவத்தினை கொரோனா ஒழிப்பிற்கு பயன்படுத்த காவல் துறை திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் சுங்கம் மற்றும் கலால் வரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, கலால்வரி திணைக்களம் 75 ஆயிரம் லீற்றர்களை காவல் துறையினரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கனிய வள அகழ்வு ….

கனிய வள அகழ்வு பணிகளுக்கான அனுமதி பத்திர காலாவதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிறைவடைந்த அனைத்து அனுமதி பத்திரங்களின் காலாவதி திகதியை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க புவியியல் ஆய்வு மறறும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் மேலும் அறிவித்துள்ளது. இந்த தகவல் காவல் துறை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்துறையில் …

ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்

ஓய்வூதிய கொடுப்பனவு…

ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கும் வேலைத்தி;ட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஓய்வூதிய சம்பளத்திற்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி தபால் அலுவலகங்களிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு ஏப்ரல் மாதம் 04 திகதியளவில் தமது ஓய்வூதிய சம்பளம் தமது வீட்டை வந்தடையாதோர் மாத்திரம் அது தொடர்பில் தமது ஓய்வூதிய சம்பளத்தை வழமையாக பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்தின் தபால் அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுத்தருமாறு கோருமாறு தபால் மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

ஸ்பென்…..

ஸ்பெய்ன் தனது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளால் சுமார் 9 லட்சம் பேர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெய்னில் மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

அத்தியவசிய பயணங்களை தவிர ஏனைய அனைத்தையும் ஸ்பெய்ன் தடை செய்தது. இதனையடுத்து மார்ச் மாத நடு பகுதியில் அனைத்து வர்த்தகங்களும் மூடப்பட்டன. ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேவேளை ஸ்பெய்னின் புதிய புள்ளிவிபரங்களின் படி நாடு முடக்கப்பட்டத்தில் இருந்து 8 லட்சத்து 98 ஆயிரத்து 822 பேர் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள்.

ஸ்பெய்னில் 3.5 மில்லியன் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத நிலைமை என ஸ்பெய்ன் தொழிலமைச்சர் Yolanda Dணaz தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் கட்டிட நிர்மாணத்துறை என்பன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதிலும் 25 மில்லியன் பேர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts:

வீடு, சிறிய வியாபார நிர்மாணத்திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி - ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்...