ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்த விரும்புகின்றோம் – மஹிந்த தேசப்பிரிய
Thursday, December 22nd, 2016
எதிர்வரும் 2017ஆம் திகதி ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் தேர்தலை நடத்துவது வேட்பாளருக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு 90 நாட்கள் தேவைப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிப்பது பொருத்தமானது எனவும், பண்டிகைக் காலத்தில் வேட்பாளர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள சிரமப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
|
|
|


