ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை – அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, March 12th, 2021

ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி தொடர்பான முகாமைத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேசிய குழுவொன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது காணப்படும் சட்ட வரையறைகளுக்கமைய இலங்கையில் ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விப் பொறிமுறை மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்குரிய நிறுவனங்களின் சில படிநிலைகளுக்கமைய இடம்பெறும் ஒருங்கிணைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், குறித்த துறையின் தரநியமங்களை தேசிய மட்டத்தில் பேணுதல் மற்றும் கண்காணிப்பு செய்யும் செயன்முறையை வலுவூட்டும் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமையவே முன்பள்ளிகள், ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக தேசிய ரீதியான ஒழுங்குபடுத்தல்கள், கண்காணிப்பு மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுக்கு குறித்த துறைசார்ந்த கல்வியியலாளர்கள் மற்றும் தீர்மானம் எடுக்கும் உத்தியோகத்தர்களுடன் கூடிய ‘ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேசிய குழு’ எனும் பெயரில் குழுவொன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் யோசனையொறை அமைச்சரவைக்கு மன்வைத்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: