எல்லை நிர்ணயம் குறித்து தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு!

எல்லை நிர்ணயங்கள் நிறைவாகியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பெப்ரல் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட நீதிமன்ற குழுவின் முன் நேற்று(19) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட்ட தரப்பினர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை கிடைக்கப்பெறாமை காரணமாக மனு தொடர்பான விசாரணை ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
Related posts:
மேலதிக நீதவானாக சித்ரசிறி சத்தியப் பிரமாணம்!
மீண்டும் இபோலா உயிர்கொல்லி நோய்: 17 பேர் பலி!
4 மாதங்களில் பெரும் இலாபத்தை ஈட்டி பெற்றோலிய கூட்டுத்தாபனம் - நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டு!
|
|