எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!
Sunday, January 28th, 2018
எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு(27) இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின் இரண்டு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
Related posts:
புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடை...
அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
துறைமுகத்தில் சிக்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|
|


