துறைமுகத்தில் சிக்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022

டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொள்கலன்களின் விடயதானங்கள் அடங்கிய ஆவணங்களை மத்திய வங்கிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், நாளை (20) முதல் குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அரிசி, சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்கள் இதன்மூலம் சந்தைக்கு விடுவிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­செய்­யப்­பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்­ப...
1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும...
'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது - பாதுகாப்பு இ...