எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!
Thursday, February 24th, 2022
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையைச் சேர்ந்த 22 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 கடற்றொழிலாளர்களை கைது செய்த கடற்படை, அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கையகப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 கடற்றொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழிலாளர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் கைது!
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப...
எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவு !
|
|
|


