‘எரோப்லொட்’ விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!

Saturday, June 4th, 2022

ரஷ்யாவின் ‘எரோப்லொட்’ விமானம் ஒன்றுக்கு நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆராய்வின் போது இவ்வாறு திகதியிடப்பட்டுள்ளது.

இதன்படி அந்த மனு மீதான ஆராய்வு எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளது. சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு அமைய விமானத்தை தரையிறக்க மற்றும் வெளியேற்ற தேவையான வசதிகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளர் சார்பாக மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ‘எரோப்லொட்’ விமானத்தின் சகல பயணிகளும் நாளையும் நாளை மறுதினமும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ‘எரோப்லொட்’ நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவ் நோக்கி பயணிக்கவுள்ள விமானங்களில் அந்த தரப்பினர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: