தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான வழிமுறைகளை முன்வையுங்கள் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள்!

Monday, October 10th, 2022

நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள் முன்வருமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என அறிவித்துள்ள நிலையில், அதன் நிலைமையிலிருந்து மீள்வது எப்படி என்பதை எவரேனும் அரசாங்கத்திற்கு கற்பிக்க முடியுமானால் அது அவர்களுக்கு இவ்வுலகில் புகழையும் மறுமையில் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசு இறையாண்மை பத்திரங்களை வழங்கி வாங்கிய கடனில் ஒரு பகுதியை செலுத்தவில்லை என்று கூறி அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவ்வாறான ஒரு வழக்கை எதிர்கொள்ளும் நிபுணத்துவம் இலங்கைக்கு இல்லை என்றும் அவர் கூறினார். எனவே, Clifford and Sons என்ற நிறுவனத்திடம் சட்ட ஆலோசனை வழங்கும் பொறுப்பை அரசு ஒப்படைத்து, நெருக்கடியில் இருந்து நம்மை விடுவிப்பதற்கான அமைப்பைத் தயாரிக்க Lazard என்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: