91 மில்லியன் பெறுமதியான அலுங்கு பட்டைகளுடன் மூவர் கைது!

Tuesday, November 14th, 2017

52 மில்லியன் ரூபா பெறுமதியான அலுங்கு என்ற அருகி வரும் விலங்கின் பட்டைகள் எனக் கூறப்படும் பட்டைகள் நான்கு உரப் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்பிட்டி தில்லையடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.130 கிலோ கிராம் எடைக்கொண்ட இந்த அலுங்கு பட்டைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ அலுங்கு பட்டை சுமார் 7 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரன்வலஆராச்சி தெரிவித்துள்ளார்.அலுங்கு பட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஒரு அலுங்கில் இருந்து 750 கிராம் பட்டைகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

Related posts: