எனது கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் – சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2016

எனது கதிரை பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. எனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாரகவேயுள்ளேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாரளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 9.30இக்கு ஆரம்பமானது. சபாநாயகர் அறிவிப்பு வாய்மூல விடைக்கால கேள்விநேரம் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. யான ரஞ்சித் அலுவிஹார, பணியாட்தொகுதியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்ததாக சபாநாயர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் துப்பரவு பணியாளர்கள் சபைக்குள் தமது பணியை மேற்கொண்டிருந்த போது பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்ததாக அந்த பொறியிலாளரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று சபையில் உங்களது  ஆசனம் தொடர்பில் (சபாநாயகரின் ஆசனம்) உங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அது தொடர்பில்  செய்தியை பிரசுரித்த இரண்டு  ஊடகவியலாளர்களுக்கு பாரளுமன்றத்திலேயே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தாங்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்குப்பதிலளித்த சபாநாயகர், அது குறித்து நான் கவனம் செலுத்தியுள்ளேன். ஊடகவியாலாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பில் நான் எழுத்துமூலம் அறிவிக்குமாறு கூறியுள்ளேன். அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் யார் என்று நான் விசாரணை செய்கின்றேன்.

நீங்கள் அந்த நபர் எனது கதிரையில் அமர்ந்தமை குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் எனது கதிரை குறித்து நான் தான் அச்சமடைய வேண்டும். நாட்டில் பாரிய பிரச்சினைகள் பல இருக்கும்போது,  இந்தக் கதிரையில் அமர்ந்தமை தொடர்பிலும் விசாரணை செய்து பார்க்கின்றேன்.

சபை நிர்வாகத்தை நான் சிறப்பாக முன்னெடுக்கின்றேன். இது பாரிய பிரச்சினை அல்ல. இதைவிட பாரிய பிரச்சினைகள் நாட்டில் இருக்கின்றன. எனது கதிரை பற்றி எனக்கு பாரிய பிரச்சினை இல்லை. இந்தக் கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து எழுந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன எம்.பி. யும் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊடகவியலாளர்களை இவ்வாறு எப்படி அச்சுறுத்த முடியும். ஆகவே நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் என்றார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய உங்களின் விடயத்தை நான் கருத்திற்கொண்டு ஆராய்கின்றேன் என்றார்.

111

Related posts: