நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுதலை!

Monday, December 25th, 2023

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு இன்றையதினம் (25) விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்ளவர்களில்  989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்த...
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
பொலிசார் துப்பாக்கிச் சூடு - பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் பருத்தித்துறை பொலிசாரால் கைது...