உருளைக்கிழங்கு கிலோ 60  முதல் 70 ரூபாவுக்கு விற்பனை!

Tuesday, February 6th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ளது. உள்@ர்ச் சந்தைகளில் கிலோ 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேவேளை வெளிமாவட்டச் சந்தைகளில் 60 ரூபாவுக்குக் குறையாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

விளைச்சல் சராசரிக்கு குறையாத நிலையில் இருக்கின்றது என சமாஜத்தின் செயலாளர் எஸ்.சசிக்குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

குடாநாட்டில் கடந்த பெரும்போகத்தில் நடுகைசெய்யப்பட்ட உருளைக்கிழங்கின் அறுவடை ஜனவரி இறுதிவாரத்தில் ஆரம்பமாகியுள்ளது. நடுகை செய்யப்பட்ட நாள் இடைவெளியைக் கருத்தில்கொண்டு மார்ச் மாதம் நடுப்பகுதி வரை அறுவடை நடைபெறும்.

இந்த வருடம் உருளைக்கிழங்குப் பயிர்ச்செய்கைக்கு சாதகமான காலநிலை மற்றும் பனிப்பொழிவு இருத்தமையால் விளைச்சல் சராசரிக்கு குறையாத அளவு காணப்படுகின்றது. ஒரு அந்தர் கிழங்குக்கு விளைச்சல் 8 முதல் 12 அந்தர் வரை இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த வருடம் எட்டு அந்தருக்கு குறையாத அளவில் விளைச்சல் உள்ளது.

குடாநாட்டு உருளைக்கிழங்கு தம்புளை மத்திய சந்தை மற்றும் கொழும்பு புறக்கோட்டைச் சந்தைகளில் கிலோ ஒன்று 60 ரூபாவுக்கு குறையாத விலைக்கு விற்பனையாகின்றது. உள்@ரில் சில்லறை விலை 70 ரூபாவுக்கு குறையாமல் விற்பனை செய்யப்படுகின்றது.

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டால் உருளைக்கிழங்கின் விலை மேலும் அதிகரிக்கலாம். இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு சமாஜம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார்.

Related posts: