நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் – சமுர்த்தி திட்டத்தை முன்னேற்றி கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டமாக மாற்றவும் நடவடிக்கை பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021

நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் – இலங்கை ஆசியாவின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடு என அழைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இனிமேலும் இடமில்லை எனவும் உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்று இலங்கை எனவும் தெரிவித்துள்ளார்.  

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கைய விட சூழலை அதிகமாக நேசிக்கும் நாடு எதுவுமில்லை என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, 2022 ஆம் ஆண்டு பதிவு செய்வதற்கான கட்டணம் அறிவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடும் உலக நாடுகளும் பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள நிதி அமைச்சர்   போதைப்பொருள் மாபியா நாடு எதிர்கொண்டுள்ள பெரும் நெருக்கடிகளில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் கொவிட் காரணமாக இலங்கை 500 மில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கங்கள் வெளிநாட்டு நாணய கையிருப்பு தொடர்பில் தொலை நோக்குடன் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்து வருமான வழிமுறைகளும் தடைப்பட்டிருந்தாலும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் எங்களிடம் வாய்ப்பு உள்ளது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவலுக்கு முகங்கொடுத்து உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான தளமாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் சேவை மற்றும் பொருட்களின் விலைகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைப் பொருளாதாரத்தை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக நிலுவை பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சேவைத் துறையிலிருந்து அதிக பங்களிப்பைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை 10 வருடங்களால் நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய புதிய சம்பள அமைப்பும் முன்மொழியப்பட்டுள்ளது. பணியாளர்களை வலுப்படுத்தும் வகையில் அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தள்ள நிதி அமைச்சர் சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான தர்க்கரீதியான முறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு 5 லீற்றரால் குறைக்கப்படும் அதேவேளை தொலைபேசிக் கட்டணமும் 20 சதவீதம் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை களைய புத்தாண்டுமுதல் பாடுபடுடவுள்ளதாகவும் கறிப்பட்ட அவர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய திகதியில் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரச நிறுவனங்களிற்கான புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு இரண்டு வருடங்களிற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பசில் ராஜபக்ச உணவுப் பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதைக் குறிக்கிறது. எந்த உறுப்பினரும் பட்டினி கிடக்காதபோது ஒரு குடும்பம் உணவுப் பாதுகாப்பை அடைகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரி திணைக்களத்தை பலப்படுத்துமாறும் யோசனை முன்வைக்கின்றோம். தொலைக்காட்சிகளுக்கான அலைவரிசை பகிரங்க ஏலத்தில் விடப்படும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள 7 இலட்சம் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களை பாதுகாப்பதற்கு முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க முன்மொழிவினை முன்வைப்பதாகவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி அலைவரிசைகளை, நாடு முழுவதும் விரிவுப்படுத்தி, நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 155 பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை வழங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காப்புறுதி குறித்து அவதானம் செலுத்தப்படாத பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் புதிய காப்புறுதி திட்டங்களை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவு வங்கிகளின் ஊடாக வைப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை நடத்தி, அதனால் நட்டம் ஏற்படும் பட்சத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி திட்டத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டமாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

செலவீனங்கள் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சினால் வருடாந்தம் அரசாங்க திணைக்களங்களுக்கு வழங்கப்படும் நிதியை காலாண்டு விதத்தில் பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக வெளியிடப்பட்ட அனைத்து கருத்துக்களும் வரவு செலவுத்திட்ட தயாரிப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்த அவர் 2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 வரவு- செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு என்ற தேசிய கொள்கையை முழுமையாக கவனத்தில் கொண்டோம் எனவும்  தெரிவித்த அவர்  சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், துறைமுக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் அதிக செலவீனம், கடன்களை செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிறது எனவும் நல்லாட்சி அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட 6.9 பில்லியன் டொலர் கடனை எங்களுடைய அரசாங்கம் செலுத்த வேண்டி வந்தது எனவும் சுட்டிக்காட்டியிரந்த அவர் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்த நிதி அமைச்சர் வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற போது, நாட்டின் கடன் தொகை 13 ஆயிரத்து 32 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. நாட்டில் வருமானத்தில் அதிகளவிலான செலவீனம், கடனை செலுத்துவது மற்றும் வட்டியை செலுத்துவதாகும் எனவும் சுட்டிக்காட்டிய அவர் புலம்பெயர் தொழிலாளர்களினால் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இல்லாது போயுள்ளது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாதீட்டு உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: