எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!
Tuesday, July 24th, 2018
எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணத்தை பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பூரணை தினமான அன்று இலங்கை நேரப்படி இரவு 10.45 மணிக்கு பூரண சந்திர கிரகணம் ஆரம்பமாகவுள்ளதுடன் மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை அதனை இலங்கையர்கள் பார்வையிட முடியும்.
இந்த வருடத்தில் ஏற்படப்போகும் இரண்டாவது பூரண சந்திர கிரகணம் இது என்பதுடன், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பூரண சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் - அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதகர...
பழக்கடை விவகாரம் - பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி - மாநகரின் அமர்வில் குழப்பம்!
|
|
|


