அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021


அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காரியாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காரியாலயங்கள் உள்ளேயும் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணியாளர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயும் முகக் கவசம் அணிந்திருப்பதனை அலுவலக மேற்பார்வையாளர்கள் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாதது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பணியாளர்கள் பணியிடத்திற்கு பிரவேசிக்கும் போதே முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பணி செய்யும் முழு நேரத்திலும் அவர்கள் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டுமேனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைகள், காரியாலங்கள் உள்ளிட்டவற்றுக்குள் பிரவேசிக்கும் வாடிக்கையாளர்கள் சேவை பெறுனர்களும் முகக் கவசங்களை அணிந்திருப்பதனை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
அனைத்து நிறுவனங்களினதும் முகாத்துவம் கோவிட் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது முக்கிய கடப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாதிருப்பதனை நிறுவனங்களின் முகாமைத்துவம் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களுக்குள் பிரவேசிக்கும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை கட்டாயமாக அளவீடு செய்யப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் நோய்த் தொற்று பரவுகை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் கோவிட் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: